சின்ன சின்ன கிளியே பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Kannethirey Thondrinal (1998) (கண்ணெதிரே தோன்றினாள்)
Music
Deva
Year
1998
Singers
Anuradha Sriram, Hariharan
Lyrics
Vairamuthu
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
பால் சொட்டும் நட்சத்திரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவென் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

நிலா நிலா காதல் நிலா
அவள் வாழ்வது உள்ளூரிலா
உலா உலா வா வெண்ணிலா
கண்வாழ்வது கண்ணீரிலா
பாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பார்த்தாயா
தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா
ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பார்த்தாயா
ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன்காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

எங்கே எங்கே விண்மீன் எங்கே
பகல் வானிலே நான் தேடினேன்
அங்கே இங்கே காணோம் என்று
அடி வானிலே நானேறினேன்
கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பார்த்தாயா
உள்ளாடும் காற்றே அவளின் உள்ளம் சென்று பார்த்தாயா
தூறல் போடும் துளியே உயிரை தொட்டுப் போனவள் பார்த்தாயா
பஞ்சு போல நெஞ்சை தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
பஞ்சவர்ண கிளியே
பால் சொட்டும் நட்சத்திரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவென் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.