மின்னலே நீ வந்ததேனடி பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
May Madham (1994) (மே மாதம்)
Music
A. R. Rahman
Year
1994
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

****

ஆண் : கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே


{ஆண் : கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
ஆ&பெ குழு: ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...
ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...ஆ...ஹ...ஹா...} (Over lap)

ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

***

ஆண் : பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
{ஆண் : வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா
நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்


ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.