என் மன்னவா மன்னவா பாடல் வரிகள்

Last Updated: Feb 03, 2023

Movie Name
Lingaa (2014) (லிங்கா)
Music
A. R. Rahman
Year
2014
Singers
Sonakhi Sinha
Lyrics
பெண்:
என் மன்னவா! மன்னவா!
என்னைவிட அழகி உண்டு - ஆனால்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை - ஆமாம்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை.

பெண்:
சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தாய் - இந்த
வெண்ணிலவை வெண்ணெய் பூசி
விழுங்கிவிட்டாய்
அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?
உன் கண்களோ உன் கண்களோ
பூ தேடுதே
உன் கைகளோ உன் கைகளோ
வேர் தேடுதே

பெண்:
நூறு யானைகளின்
தந்தம்கொண்டு - ஒரு
கவசம் மார்பில் அணிந்தாய்
கலசம்கொண்டு அந்தக் கவசம் உடைத்து
உன் மார்பில் மையமிட்டேனே

ஆண்:
தென்னாட்டுப் பூவே
தேனாழித் தீவே
பாலன்னம் நீ - நான்
பசிக்காரன் வா வா
மோகக் குடமே
முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்தி வை ராணி

ஆண்:
வெய்யில் பாராத
வெள்ளைப் பூக்களைக்
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்ற மன்னன் - உன்
கால் சுண்டுவிரல் கேட்டேனே

பெண்:
சிற்றின்பம் தாண்டி
பேரின்பம் கொள்வோம்
உயிர் தீண்டியே நாம்
உடல் தாண்டிப் போவோம்
ஞான அழகே
மோன வடிவே
என்னைக் கூடல்கொள்ள வா
கொற்றவை மைந்தா....
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.