மனமே மயங்காதே விடியும் கலங்காதே பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Kanmaniye Pesu (1986) (கண்மணியே பேசு)
Music
Raveendran
Year
1986
Singers
K. J. Yesudas
Lyrics
Vairamuthu

மனமே மயங்காதே விடியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
குலமகள் கோலங்கள் போனதே
மனமே மயங்காதே விடியும் கலங்காதே...

வாழ்ந்து பார்த்தது வாடகை வாழ்க்கை
உரியவள் வந்தாள் வழி விடடி
பூசி பார்த்தது யார் தந்த மஞ்சள்
அவள் மஞ்சள் தானே அழித்திடடி

அடடா கலைந்தது மாங்கல்ய வேஷம்
நாளைக்கு வேறொரு நாடகம்
மனமே மயங்காதே விடியும் கலங்காதே

ஊமை நாடகம் ஏனடி பெண்ணே
உண்மையை சொல்ல தயக்கம் என்ன
பிள்ளை செய்த பாவமும் என்ன
வெள்ளை சேலையை மறுப்பதென்ன
வழக்கில் குழப்பங்கள் தீர்ப்புகள் எங்கே
வாழ்வது நாடக வாழ்க்கையே..

மனமே மயங்காதே விடியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
குலமகள் கோலங்கள் போனதே
மனமே மயங்காதே விடியும் கலங்காதே...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.