வானம் எங்கள் எல்லை பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Kanmaniye Pesu (1986) (கண்மணியே பேசு)
Music
Raveendran
Year
1986
Singers
K. S. Chithra, Malaysia Vasudevan
Lyrics
Vaali

வானம் எங்கள் எல்லை...எல்லை
ஊரென்ன பேரென்ன
ராஜா வீட்டுப் பிள்ளை பிள்ளை
எங்கேயும் எங்கேயும்
சந்தோஷம் சந்தோஷம்
உள்ளத்தில் இனிக்கிற
உல்லாசம் உல்லாசம்
கல்லூரி பறவைகள் நாம்........
அச்சமென்ன வெட்கமென்ன மிச்சமென்ன மீதமென்ன

வானம் எங்கள் எல்லை...எல்லை
ஊரென்ன பேரென்ன
ராஜா வீட்டுப் பிள்ளை பிள்ளை
எங்கேயும் எங்கேயும்
சந்தோஷம் சந்தோஷம்
உள்ளத்தில் இனிக்கிற
உல்லாசம் உல்லாசம்
கல்லூரி பறவைகள் நாம்........
அச்சமென்ன வெட்கமென்ன மிச்சமென்ன மீதமென்ன

வானம் எங்கள் எல்லை
எல்லை எல்லை எல்லை எல்லை எல்லை
ராஜா வீட்டுப் பிள்ளை
பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை...

மாங்குயில் போலவே எல்லோரும் மாறலாம்
மாலையில் சோலையில் சங்கீதம் பாடலாம்
கேளுங்கம்மா நம்ம குரலை
தோத்துப் போகும் கேணித் தவள

சாரீரத்தில் என்ன கொறச்சல்
சொல்லப் போனா ரொம்ப எறச்சல்
பாட்டுப் படிக்க கத்துத் தரணும்
வேளை அதுக்கு ஒத்து வரணும்
நேரம் இப்போ நல்லா இருக்கு

வானம் எங்கள் எல்லை
எல்லை எல்லை எல்லை எல்லை எல்லை
ராஜா வீட்டுப் பிள்ளை
பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை...

மாணவன் மாணவி கல்லூரி நாட்களில்
நாயகன் நாயகி கல்யாண மேடையில்
யாருக்கென்று யாரை சொல்வதோ
நாணம் விட்டு பேரைச் சொல்வதோ

யாரு நெஞ்சம் யாரின் பக்கமோ
சொல்லுங்கம்மா என்ன வெக்கமோ
கண்ணில் இருக்கு காதல் கவிதை
அள்ளிக் கொண்டது எந்த மனதை
யாரால் அதைச் சொல்ல முடியும்

வானம் எங்கள் எல்லை...எல்லை
ஊரென்ன பேரென்ன
ராஜா வீட்டுப் பிள்ளை பிள்ளை
எங்கேயும் எங்கேயும்
சந்தோஷம் சந்தோஷம்
உள்ளத்தில் இனிக்கிற
உல்லாசம் உல்லாசம்
கல்லூரி பறவைகள் நாம்........
அச்சமென்ன வெட்கமென்ன மிச்சமென்ன மீதமென்ன

வானம் எங்கள் எல்லை
எல்லை எல்லை எல்லை எல்லை எல்லை
ராஜா வீட்டுப் பிள்ளை
பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.