சந்திர மண்டலத்தை பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Nilaave Vaa (1998) (நிலாவே வா)
Music
Vidyasagar
Year
1998
Singers
Harini, S.P.B. Charan, Vijay
Lyrics
Vairamuthu
சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

ஹேய் சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவோம்
அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்

புத்துலகம் கண்டு வைப்போம்

சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

கண்ணில் ஒரு கள்ளம் இல்லை
விண்வெளியில் பறக்க ஒரு விசா தேவையில்லை
கை விலங்கு ஏதும் இல்லை

பூமி ஒரு பள்ளிக்கூடம்
பூவை மட்டும் படித்திருப்போம் புத்தகம் தேவையில்லை
எங்கள் புத்தியில் பாரமில்லை

ஆணும் பெண்ணும் அன்பால் அன்பால் நட்பை வளக்கலாம்

ஹேய் காதலையும் கடந்து ஒரு கற்பை வளர்க்கலாம்

நாம் கண்டோம் புதிய இயக்கம்

இது கண்ணீர் துளியை ஒழிக்கும்

நாம் காணும் கனவு பலிக்கும்
எங்களுக்கும் ரெக்கை முளைத்திடும்

சந்திர மண்டலத்தை  சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்

வார்த்தைகள் கோலமிட்டு  புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால்
கட்டுக்கதை கட்டி இந்த ஊரும் சிரிக்குமே
அது உண்மையை எரிக்குமே

தண்ணீரிலே தன்னை சுற்றி
தவளைகள் கத்தும் போதும் தாமரை மலருமே

ஹூம் ஹூம் தாமரை மலருமே

வானில் விடும் பட்டம் போலே வட்டம் அடிக்கலாம் ஹேய்

வால் முளைத்த ஜீவன் போலே கொட்டம் அடிக்கலாம்

இனி போதாதிந்த உலகம்

நாம் காண்போம் பத்தாம் கிரகம்

அங்கு இல்லை இல்லை மரணம்

எங்கள் இனம் காலத்தை வெல்லட்டும்

சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

 இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவோம்

 அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்

 புத்துலகம் கண்டு வைப்போம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.