இந்திரன் வந்ததும் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Aan Paavam (1985) (ஆண் பாவம்)
Music
Ilaiyaraaja
Year
1985
Singers
Ilaiyaraaja
Lyrics
Vairamuthu
ஆண் : ஹே வந்தனம் வந்தனம்
குழு : வந்தனம் வந்தனம்
ஆண் : வந்த சனமெல்லாம்
குழு : குந்தணும் குந்தணும்

ஆண் : இந்திரன் வந்ததும்
சந்திரன் வந்ததும்
இந்தச் சினிமாதான்
இங்க எம்ஜிஆர் வந்ததும்
என்டிஆர் வந்ததும்
இந்தச் சினிமாதான்

குழு : இந்திரன் வந்ததும்
சந்திரன் வந்ததும்
இந்தச் சினிமாதான்
இங்க எம்ஜிஆர் வந்ததும்
என்டிஆர் வந்ததும்
இந்தச் சினிமாதான்

ஆண் : கலை வளர்ந்ததும்
குழு : இங்கேதான்
ஆண் : காதல் சொன்னதும்
குழு : இங்கேதான்

ஆண் : கலை வளர்ந்ததும்
குழு : இங்கேதான்
ஆண் : காதல் சொன்னதும்
குழு : இங்கேதான்

குழு : கட்சி வளர்த்ததும்
ஆட்சி புடிச்சதும்
இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல
ஆட்சி அமைச்சதும்
இந்தச் சினிமாதான்

ஆண் மற்றும் குழு :
இந்திரன் வந்ததும்
சந்திரன் வந்ததும்
இந்தச் சினிமாதான்
இங்க எம்ஜிஆர் வந்ததும்
என்டிஆர் வந்ததும்
இந்தச் சினிமாதான்

ஆண் : கைலாச நாதன
முருகனக் கண்ணால
பாக்கத்தான் முடியுமா கூறு
அம்பத்தஞ்சு காசு நீ
குடுத்துட்டா தன்னால
கடவுளப் பாக்கலாம் பாரு

ஆண் : காத்தவராயன்
குழு : மதுர வீரன்
ஆண் : தெரையிலதானே
குழு : புரிஞ்சிருச்சு
ஆண் : காந்தியக்கூட
படத்துலதானே
இன்னைக்கு தேசம்
குழு : தெரிஞ்சிருச்சு

ஆண் : அட பசி தூக்கம் பறந்தாச்சு
பழசெல்லாம் மறந்தாச்சு
கொட்டக வளந்த பெறகு
நாட்டுல குத்தம் கொறஞ்சிருக்கு

ஆண் : எத்தனையோ மேதைங்க
ஞானிங்க வீரங்க
வெள்ளித்திரை தந்தது இங்கே
அரிச்சந்திரன் நாடகம்
பாத்துத்தான் காந்தியும்
சத்தியத்த நம்பினார் அங்கே

ஆண் : கிசுகிசு
குழு : போட்டு
ஆண் : கேள்வி பதில்
குழு : போட்டு
ஆண் : பத்திரிக்க வந்தா
குழு : லாபமுங்க

ஆண் : வாழ்க்கைக்கு
குழு : இங்கே
ஆண் : வடிகால்
குழு : வேணும்
ஆண் : சினிமா ஒண்ணு
குழு : போதுமுங்க

ஆண் : அட பகலெல்லாம் ஒழச்சீங்க
இரவெல்லாம் சிரிச்சீங்க
வெள்ளித் திரையில தங்கம் வெளஞ்சுது
எங்க சினிமாதான்

குழு : அட வெள்ளித் திரையில
தங்கம் வெளஞ்சுது
எங்க சினிமாதான்

குழு : இந்திரன் வந்ததும்
சந்திரன் வந்ததும்
இந்தச் சினிமாதான்
இங்க எம்ஜிஆர் வந்ததும்
என்டிஆர் வந்ததும்
இந்தச் சினிமாதான்

ஆண் : கலை வளர்ந்ததும்
குழு : இங்கேதான்
ஆண் : காதல் சொன்னதும்
குழு : இங்கேதான்

ஆண் : கலை வளர்ந்ததும்
குழு : இங்கேதான்
ஆண் : காதல் சொன்னதும்
குழு : இங்கேதான்

குழு : கட்சி வளர்த்ததும்
ஆட்சி புடிச்சதும்
இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல
ஆட்சி அமைச்சதும்
இந்தச் சினிமாதான்

ஆண் மற்றும் குழு :
ஹே தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன
அட தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.