சிங்க நடை போட்டு பாடல் வரிகள்

Movie Name
Padayappa (1999) (படையப்பா)
Music
A. R. Rahman
Year
1999
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு

என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா
பாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா
என்றும் நல்ல தம்பி நான் அப்பா நன்றியுள்ள ஆளப்பா
தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா

பத்து மாடி வீடு கொண்ட சொத்து சுகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கி தரும் பதவியும் வேண்டாம்
மாலைகள் இட வேண்டாம்
தங்க மகுடமும் தரவேண்டாம்
தமிழ் தாய்நாடு தந்த அன்பு போதுமே
என் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு
கொடுத்தது தமிழல்லவா
என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும்
கொடுப்பது முரியால்லவா
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா
பாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா

உன் கையை நம்பி உயர்ந்திட பாரு
உனக்கென எழுது ஒரு வரலாறு
உனக்குள்ளே சக்தி இருக்கு
அதை உசுப்பிட வழி பாரு
சுப வேளை நாளை மாலை சூடிடு
அட எவனுக்கு என்ன குணம் எவனுக்கு என்ன பலம்
கண்டதில்லை ஒருவருமே
ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் கண் விழிக்கும்
அதுவரை பொறு மனமே
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா
 பாசமுள்ள மனிதனப்பா  நான் மீசவெச்ச குழந்தையப்பா
 என்றும் நல்ல தம்பி நான் அப்பா நன்றியுள்ள ஆளப்பா
 தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா

 சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு ஹோய்
 படையப்பா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.