ஓ கிக்கு ஏறுதே பாடல் வரிகள்

Movie Name
Padayappa (1999) (படையப்பா)
Music
A. R. Rahman
Year
1999
Singers
Mano
Lyrics
Vairamuthu
ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல

தங்கத்தை பூட்டி வைத்தாய் வைரத்தை பூட்டி வைத்தாய் உயிரை பூட்ட ஏது பூட்டு
குழந்தை ஞானி இந்த இருவர் தவிர இங்கே சுகமாய் இருப்பவர் யார் காட்டு
ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்கை நமது மட்டும் இது தான் ஞான சித்தர் பாட்டு
ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்கை நமது மட்டும் இது தான் ஞான சித்தர் பாட்டு
இந்த பூமி சமம் நமக்கு
நம் தெருவுக்குள் மத சண்டை ஜாதி சண்டை வம்பெதுக்கு
ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே

சஜ்னாரே சஜ்னாரே ….

தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை  இல்லை
முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை  இல்லை
பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை
எண்ணிப் பார்க்கும் வேளையிலே
உன் வாழ்கை மட்டும் உந்தன் கையில் உண்டு அதை வென்று எடு
ஓ ஓ ஓ ஓ  கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ  வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
கொண்டு செல்ல

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.