தென்கிழக்கு சீமையிலே பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Kizhakku Cheemaielea (1993) (கிழக்கு சீமையிலே)
Music
A. R. Rahman
Year
1993
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam, Vairamuthu
Lyrics
Vairamuthu
பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

***

பெண் : தாய் வீட்டுப் பேரும் தாய் மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே

ஆண் : சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே

பெண் : குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே

ஆண் : கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வல்லையே

பெண் : உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

பெண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு

***

ஆண் : செங்காட்டு மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும்
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே

பெண் : தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே

ஆண் : பந்தத்தை மீறிப் போக சக்தி இல்லையே

பெண் : பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே

ஆண் : வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.