நில்லாயோ பாடல் வரிகள்

Movie Name
Bairavaa (2017) (பைரவா)
Music
Santhosh Narayanan
Year
2017
Singers
Haricharan
Lyrics
Vairamuthu
(இசை)
மஞ்சள் மேகம்
ஒரு மஞ்சள் மேகம் 
சிறு பெண்ணாகி முன்னே போகும் 
பதறும் உடலும் 
என் கதறும் உயிரும் 
அவள் பேர் கேட்டு பின்னே போகும் 

செல்லப் பூவே 
நான் உன்னைக் கண்டேன் 
சில்லுச் சில்லாய்
உயிர் சிதறக் கண்டேன் 

நில்லாயோ நில்லாயோ 
உன் பேர் என்ன 
உன்னாலே மறந்தேனே 
என் பேர் என்ன 
(இசை)

கனவா கனவா நான் காண்பது கனவா 
என் கண் முன்னே கடவுள் துகளா
காற்றின் உடலா கம்பன் கவிதை மடலா
இவள் தென் நாட்டின் நான்காம் கடலா
சிலிக்கான் சிலையோ ஓ... சிறுவாய் மலரோ ஓ...
வெள்ளை நதியோ ஓ... வெளியூர் நிலவோ ஓ...

நில்லாயோ நில்லாயோ
உன் பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என் பேர் என்ன
(இசை)

செம்பொன் சிலையோ இவள் ஐம்பொன் அழகோ 
பிரம்மன் மகளோ இவள் பெண்பால் வெயிலோ 
நான் உன்னைப் போன்ற பெண்ணை கண்டதில்லை 
என் உயிரில் பாதி யாரும் கொன்றதில்லை 
முன் அழகால் முட்டி மோட்சம் கொடு 
இல்லை பின் முடியால் என்னைத் தூக்கிலிடு

நில்லாயோ நில்லாயோ
உன் பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என் பேர் என்ன
(இசை)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.