பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது பாடல் வரிகள்

Movie Name
Vaai Kozhuppu (1989) (வாய்க்கொழுப்பு)
Music
Chandrabose
Year
1989
Singers
Vani Jayaram
Lyrics
Vairamuthu
பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது
யாரோடும் சடுகுடு ஆட சம்மதம் நீயும்
சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம்

பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது

பூவெல்லாம் கொடி மேலே புடவைகளாய் கட்டியது
புடவைகளாய் கட்டியது
பொன்மேனி என் மேனி பூக்களினால் கட்டியது
பூக்களினால் கட்டியது

கையில் கோப்பை உள்ளதா பையில் காசு உள்ளதா
ஆசை மீதம் உள்ளதா அள்ளி பாரு மன்மதா சலோய்யா
பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது

மது சிந்தும் கிண்ணம்தான் முழுவதுமே உனக்காக
முழுவதுமே உனக்காக
விரல் மீட்டும் வீணைக்கு விதவிதமாய் புதுப்பாட்டு
விதவிதமாய் புதுப்பாட்டு

அள்ளிப் பாரு மன்னவா அல்வா தோட்டமல்லவா
பள்ளிப்பாடம் சொல்லவா பந்தை போல துள்ளவா
தேக்கோன்னா

பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது
யாரோடும் சடுகுடு ஆட சம்மதம் நீயும்
சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம்

பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.