கணவனுக்காக எதையும் பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Thodarum (1999) (தொடரும்)
Music
Ilaiyaraaja
Year
1999
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Pulamaipithan

கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி
பூமி இதைப் பெண் என்று போற்றும் உலகம் ஹோ
பூமியினும் மேலம்மா பெண்ணின் இதயம்
அன்பை வளர்ப்பாள்
தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்...(கணவனுக்காக)

தெய்வ வீணை இதை இங்கு வீதியினில்
போட்டது விதி தானா
தேடி வந்த துணை வேறு மாலை இட
செய்தது விதி தானா

என்ன ஜென்மமடி பெண்ணின் ஜென்மம்
இது சொல்லடி சிவசக்தி
எந்த நாளிலடி இந்த வேதனைகள்
தீர்வது சிவசக்தி

தொடக்கம் எது முடிவும் எதுவோ
எதுவும் இங்கு தெரியாது
நடப்பதென்ன கதையா கனவா
அதுவும் இங்கு புரியாது

மாவிலைத் தோரணம் ஆடுது
அங்கொரு வாசலிலே
மங்கையினால் உயிர் ஆடுது
இங்கொரு ஊசலிலே.....(கணவனுக்காக)

நாயன ஓசையில் அங்கே ஓர்
வாழ்த்தொலி கேக்குதம்மா
பேதையின் பாதையில் இங்கே ஓர்
கானம் நெருங்குதம்மா

அக்கினி சாட்சியில் ஓர் வாழ்க்கை
ஆரம்பம் ஆகுதம்மா
அந்திமத் தீயினில் ஓர் வாழ்க்கை
பயணம் ஓய்ந்திடுமா

கணவனது வாழ்வுக்காக
நொந்து நொந்து நூலானாள்
தன் தலையில் தீயத் தாங்கும்
மெழுகுவர்த்தி போல் ஆனாள்

வாழ்க்கையின் கணக்கினில்
ஆண்டுகள் மாதங்கள் ஆகுதம்மா
மாதமும் தேய்ந்தொரு
நாள் என நொடி எனப் போகுதம்மா
விதி இதுவா அவன் எழுதும் கணக்கிதுவா...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.