அதோ மேக ஊர்வலம் பாடல் வரிகள்

Movie Name
Eeramaana Rojaave (1991) (ஈரமான ரோஜாவே)
Music
Ilaiyaraaja
Year
1991
Singers
Mano
Lyrics
Pulamaipithan
அதோ மேக ஊர்வலம் அதோ 
மின்னல் தோரணம் அங்கே 
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் 
உற்சவம் இங்கே 
ஒரே நாள் நிலவினில் முகம் 
பார்த்தேன் 
இதோ நான் உயிரினில் உனைச் 
சேர்த்தேன் வா 

(அதோ) 

உனது பாதம் அடடடா இலவம் 
பஞ்சு 
நடக்கும் போக  
துடித்தது எனது நெஞ்சு 
நிமிர்ந்த வாழைத் தண்டிலே ராஜ 
கோபுரம் 
நானும் இன்று கேட்கிறேன் 
உன்னை ஓர் வரம் 
தேகம் தன்னை மூடவே 
கூந்தல் போதும் போதுமே 
ஆடை என்ன வேண்டுமா நாணம் 
என்ன வா வா 

(அதோ) 

குழலைப் பார்த்து முகிலென 
மயில்கள் ஆடும் 
முகத்தைப் பார்த்து 
அடிக்கடி நிலவு தேயும் 
தென்னம்பாண்டி முத்தைப் 
போல் தேவி புன்னகை 
வந்து ஆடச் சொல்லுமே 
செண்டு மல்லிகை 
உன்னைச் செய்த பிரம்மனே 
உன்னைப் பார்த்து 
ஏங்குவான் 
காதல் பிச்சை வாங்குவான் 
இன்னும் என்ன சொல்ல 
(அதோ)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.