தேன் மல்லிப் பூவே பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Dheepam (1977) (தீபம்)
Music
Ilaiyaraaja
Year
1977
Singers
Lyrics
Pulamaipithan
தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே
என் கண்ணே என் ராணி
நீயின்றி நான் இல்லையே

தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே
என் கண்ணா என் மன்னா
நீயின்றி நானில்லையே

தேன் மல்லிப் பூவே...

முத்தாரம் மார் மீது தவழ்கின்றது
எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு 

தேருண்டு நீயுண்டு திருநாளுண்டு
திருமகள் நெஞ்சில் துயில் கொள்ள வா

உலகமெல்லாம் ஒரு நிலவு

இதயமெல்லாம் ஒரு நினைவு
என் வாழ்வின் ஆனந்தம் நீயே...

தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே

என் கண்ணா என் மன்னா
நீயின்றி நானில்லையே

தேன் மல்லிப் பூவே...

செவ்வாழை பொன் மேனி துடிக்கின்றது
சிறு தொட்டில் தந்து உறங்க விடு 

தித்திக்கும் செவ்வாயும் நனைகின்றது
சிறு முத்தம் தந்து மயங்க விடு

மலர்களிலே அணை விரிப்போம்

மன்மதனை துணைக்கழைப்போம்
இரவேது பகலேது கண்ணே

தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே

என் கண்ணே என் ராணி

நீயின்றி நானில்லையே

தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே
தேன் மல்லிப் பூவே...

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
ஆ... ஆ... ஆ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.