ஆயிரம் நிலவே வா பாடல் வரிகள்

Movie Name
Adimai Penn (1969) (அடிமைப் பெண்)
Music
K. V. Mahadevan
Year
1969
Singers
P. Susheela, S. P. Balasubramaniam
Lyrics
Pulamaipithan
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு(இதழோரம்) சுவை சேர(தேட)
புதுப் பாடல் ஒன்று(விழி) பாடப் பாட
(ஆயிரம்)

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன(போனதென்ன)
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன(போனதென்ன)

இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ (2)
உன்(என்) உயிரிலே என்னை(உன்னை) எழுத பொன்மேனி தாராயோ
(ஆயிரம்)

மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ (2)
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக
(ஆயிரம்)

அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ (2)
இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் ஆகாதோ
(ஆயிரம்)

பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
அந்த நிலையில் அந்த(கண்ட) சுகத்தை நான் உணரக் காட்டாயோ
(ஆயிரம்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.