அந்தரங்கம் யாவுமே பாடல் வரிகள்

Movie Name
Aayiram Nilave Vaa (1983) (ஆயிரம் நிலவே வா)
Music
Ilaiyaraaja
Year
1983
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Pulamaipithan
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : எப்படி எப்படி
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : எப்படி எப்படி

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
அந்தரங்கம் யாவுமே
ஆண் : எப்படி எப்படி
ஆண் : சொல்வதென்றால் பாவமே
ஆண் : எப்படி எப்படி

ஆண் : அந்தரங்கம் யாவுமே
சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை
மாளிகை அறியுமா…
காதலின் வாசனை
ம்ம்ஹ்ம் அறியுமா…
அந்தரங்கம் யாவுமே …ஏ..ஏ…

ஆண் : காமனே நாணம் கொண்டால் சொல்லியது தீராது
ஆண் : எப்படி எப்படி
ஆண் : கம்பனே வந்தால் கூட
கட்டுபடியாகாது
ஆண் : எப்படி எப்படி

ஆண் : கண்டதில் இன்று நான்
சொல்வது பாதியே
காவிய நாயகி
கண்ணகி ஜாதியே
அன்று ஒரு நாள்
அந்த மயிலாள்
ஆடை நனைந்தாள்
ஆண் : ஹாஹான்

ஆண் : காயும் வரையில்
தோகை உடலில்
என்னை அணிந்தாள்
நாணமே சேலையானதும்
போதையானதும்
என்னென்று சொல்ல

ஆண் : அந்தரங்கம் யாவுமே
சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை
மாளிகை அறியுமா…
காதலின் வாசனை
ம்ம்ஹ்ம் அறியுமா…
அந்தரங்கம் யாவுமே …
ஆண் : எப்படி ….
எப்படி எப்படி

ஆண் : காதலை தானம் கேட்டேன்
என்ன ஒரு தாராளம்
ஆண் : எப்படி எப்படி
ஆண் : நான் அவள் தோளில் சாய்ந்து அள்ளியது ஏராளம்
ஆண் : எப்படி எப்படி

ஆண் : தாவணிப் பூவினைச்
சோதனை செய்கிறேன்
எத்தனை மச்சங்கள்
கேள் அதைச் சொல்கிறேன்
பாவாடை உடலில் கோடி மலரில்
ஆடை அணிவேன்
ஆடை அறியும் சேதி முழுதும்
நானும் அறிவேன்
மீதியை நானுரைப்பதும்
நீ ரசிப்பதும் பண்பாடு இல்லை

ஆண் : அந்தரங்கம் யாவுமே
ஆண் : எப்படி எப்படி
ஆண் : சொல்வதென்றால் பாவமே
ஆண் : எப்படி எப்படி

ஆண் : அந்தரங்கம் யாவுமே
சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை
மாளிகை அறியுமா…
காதலின் வாசனை
ம்ம்ஹ்ம் அறியுமா…

ஆண் : ஏழையின் காதலை
மாளிகை அறியுமா…
காதலின் வாசனை
ம்ம்ஹ்ம் அறியுமா…
ஆண் : ஹ்ம்ம் அறியும்
இதுல என்ன இருக்கு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.