அடி ஆத்தி புது பூவோட வாசம் பாடல் வரிகள்

Last Updated: Mar 19, 2024

Movie Name
Thaaya Thaarama (1989) (தாயா தாரமா)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Manorama, Vani Jayaram
Lyrics
Vaali
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆஆ...
அடி ஆத்தி புது பூவோட வாசம்
பொண்ணு ஆளான மாசம்
மஞ்சள் நீராடும் திருநாளில்
மல்லிகை பூவே நீ கேளு

மணநாள் வந்தால் நாளைக்கு
மாமியார் வருவாளே
மாமியார் சொன்னா கேட்டுக்க
அதுதான் மரியாதை

அடி ஆத்தி புது பூவோட வாசம்
பொண்ணு ஆளான மாசம்
மஞ்சள் நீராடும் திருநாளில்
மல்லிகை பூவே நீ கேளு

மணநாள் வந்தால் நாளைக்கு
மாமியார் வருவாளே
மாமியார் வந்தால் பிள்ளைக்கு
மந்திரம் போடுவாளே

தாய்க்கு பின்தான் தாரம் என்று
சொன்னால் புரிஞ்சிக்கணும்
தலையில்லாமல் வாலாடாது
தன்னால் தெரிஞ்சுக்கணும்

ஹேஹே பெருமாள் மாடாய் தலையை ஆட்ட
பிள்ளையை பெறலாமா
தொட்டில் உறவு கட்டில் வரைக்கும்
தொடர்ந்தே வரலாமா

பொம்பளை வாய்ச்சா உன்னாட்டம்
உருப்படுமா சொல் சம்சாரம்
பிள்ளையை வளர்த்தால் உன்னாட்டம்
மருமகள் பாடு திண்டாட்டம்

சரிதான்மா மொறைக்காதே
அட சவடாலா அளக்காதே....

அடி ஆத்தி புது பூவோட வாசம்
பொண்ணு ஆளான மாசம்
மஞ்சள் நீராடும் திருநாளில்
மல்லிகை பூவே நீ கேளு

மணநாள் வந்தால் நாளைக்கு
மாமியார் வருவாளே
மாமியார் வந்தால் பிள்ளைக்கு
மந்திரம் போடுவாளே

அடங்காதிருக்கும் மருமகளாலே
குடும்பம் நடக்காதே
புடவை தலைப்பில் புருஷனை முடிக்க
நெனச்சா முடியாதே

எத்தனை காலம் ஆட்டிப் படைக்கும்
அத்தையின் அதிகாரம்
மருமகள் எல்லாம் போர்க்கொடி தூக்க
குறையும் தலை பாரம்

வம்புக்கு வந்தால் என்னாகும்
வாழாவெட்டி என்றாகும்
ரெண்டுல ஒண்ணு பார்ப்போமா
வழக்குகள் ஆடித் தீர்ப்போமா

உனக்காச்சு எனக்காச்சு
அட ஏம்மா பெருமூச்சு

அடி ஆத்தி புது பூவோட வாசம்
பொண்ணு ஆளான மாசம்
மஞ்சள் நீராடும் திருநாளில்
மல்லிகை பூவே நீ கேளு

மணநாள் வந்தால் நாளைக்கு
மாமியார் வருவாளே
மாமியார் வந்தால் பிள்ளைக்கு
மந்திரம் போடுவாளே

மணநாள் வந்தால் நாளைக்கு
மாமியார் வருவாளே
மாமியார் வந்தால் பிள்ளைக்கு
மந்திரம் போடுவாளே.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.