சந்திரரே சூரியரே பாடல் வரிகள்

Movie Name
Amaran (1992) (அமரன்)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
அமரன் கதையை கொஞ்சம்
அறிந்து வந்து சொல்லுங்களேன்
வீரமுள்ள ஆம்புள
அவன் மரவகுல மணிப்புள்ள
வீரமுள்ள ஆம்புள
மரவகுல மணிப்புள்ள

சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே

***

தைர்யம் இருந்துச்சுன்னா
சமுத்திரமும் கால் அளவு
துணிச்சல் வளர்ந்திருந்தா
தூண்கள் எல்லாம் நூல் அளவு
எதிரி இல்லையின்னு
எழுதி வைச்சான் ஏட்டுல
கீதைய படிக்கவில்லை
அவனும் ஒரு கண்ணனே
அவன் கடலைப் போல
காத்தப் போல காக்க வந்த சாமிங்க

சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே

***

தங்கம் போல மனசு இருக்கு
தருமனாக மாறுவான்
சிங்கத்தை வேட்டையாடி
சேரிக்கெல்லாம் போடுவான்
அமரன் சீறி வந்தா
அலையும் கூட அடங்குமே
குத்தமுள்ள ஊருல
அவன் சுத்தமுள்ள ஆளுங்க
அவன் முகத்த பார்த்து மனசு பூத்து
கோடி சனம் வாழ்த்துங்க

சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.