அடிப்பேன் பட்டதான் அதுக்கு மேலே மொட்டதான் பாடல் வரிகள்

Movie Name
Thaaya Thaarama (1989) (தாயா தாரமா)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Mano, Malasiya Vasudevan
Lyrics
Vaali
அடிப்பேன் பட்டதான் அதுக்கு மேலே மொட்டதான்
கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான் ( 2 )

சம்சாரம் செய்யும் தொல்லை அம்மாடி தாங்கவில்ல
எல்லாமே தறுதலதான் அய்யா நான் பெத்த புள்ள
சன்யாசம் வாங்கிடத்தான் தீர்மானம் பண்ணிப்புட்டேன்

ஏங்க அண்ணாச்சி உங்களுக்கிப்போ என்னாச்சு
எல்லாம் தொறக்கிற ஞானம் எப்போ உண்டாச்சு
ஏங்க அண்ணாச்சி உங்களுக்கிப்போ என்னாச்சு
எல்லாம் தொறக்கிற ஞானம் எப்போ உண்டாச்சு

சம்போன்னு சொல்லிக்கிட்டு
அம்போன்னு போவதென்ன
சம்சாரம் வேணாமுன்னு சன்யாசி ஆவதென்ன
சும்மான்னு டூப்பு வுட்டு ஏமாத்த கூடாதுங்க

அடிப்பேன் பட்டதான் அதுக்கு மேலே மொட்டதான்
கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்

சந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த
இந்திரன் கெட்டதும் பெண்ணாலே..எஸ்..எஸ்..எஸ்..
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த
இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
மனைவி நெனப்பு வந்தாலே
வயத்தக் கலக்கும் தன்னாலே

தவறுங்க உங்க எண்ணம் தாய்க்குலம் தப்பா பண்ணும்
உனக்கென்ன ஒண்டிக்கட்ட உபதேசம் பண்ணிப்புட்ட
சோறு பொங்கி போட ஒரு தாரம் வேணும் அண்ணே
அட சேல தொவைக்க சொல்வா
அவ சோறு போட்ட பின்னே

அடிப்பேன் பட்டதான் அதுக்கு மேலே மொட்டதான்
கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்

பொம்பள ராஜ்ஜியம் என்னாகும்
வீடு கட்சியப்போலத்தான் ரெண்டாகும்
போடின்னு சொல்லிடக் கூடாது
போட்டியும் பூசலும் உண்டாகும்

புரிஞ்சது உங்க எண்ணம்
மெரட்டுது பான சின்னம்
கோழியெல்லாம் சேவலாச்சு
காலம் ரொம்ப கெட்டுப் போச்சு

குடும்பத் தலைவன் நீங்க
பெண்ணை குறைகள் சொல்வது ஏங்க
அட போதும் போதும் தம்பி
நான் நீட்டப் போறேன் கம்பி

அய்யய்யே ஏங்க அண்ணாச்சி
உங்களுக்கிப்போ என்னாச்சு
எல்லாம் தொறக்கிற ஞானம் எப்போ உண்டாச்சு

கல்யாணம் எப்பவும் கட்டாதே அட
எண்ணையும் தண்ணியும் ஒட்டாதே
அனுபவிச்சு பாத்துட்டேன்
எனது பேச்ச தட்டாதே.....

எனக்கந்த அச்சமில்ல கேட்கமாட்டேன் உங்க சொல்ல
இவள நீ கட்டிக்கடா செவுத்துல முட்டிக்கடா
சேத்துக்கிறேன் இவள அட எனக்கு இல்ல கவல
அட மாட்டிக்கிட்டான் பயலே உன்ன மயக்கிப்புட்டா மயிலே

அடிடா மேளந்தான் பொறந்திருச்சு காலந்தான்
இனிமே மனைவிக்கு போடணும் நீ தாளந்தான்
தை மாசம் தேதி பாரு தம்பி நீ பரிசம் போடு
கல்யாணம் கட்டிக்கிட்டு என்னாட்டம் கஷ்டப்படு
ஒன்னோடு ஒருத்தியத்தான் இப்போ நான் சேத்துப்புட்டேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.