திருநெல்வேலி சீமையிலே பாடல் வரிகள்

Movie Name
Thirunelveli (2000) (திருநெல்வேலி)
Music
Ilaiyaraaja
Year
2000
Singers
Lyrics

ஆயிமகமாயி ஆதி சிவன் பாதியே
ஆயிரம் கண் கொண்ட அன்னை திரிசூலியே
காந்திமதி கௌரி என்றும் காளி கருமாரி என்றும்
பேரெடுத்த பெரியவளே முக்கூடாதி முத்து மாரி
முக்கண் கொண்ட முண்டக்கண்ணி
முன் இருந்து காப்பவளே........!

திருநெல்வேலி சீமையிலே
கொலுவிருக்கும் அம்பிகையே
அருள வேண்டி வாரோமம்மா ஆயிமகமாயி
அம்மா ஆயிமகமாயி

தீச்சட்டிய பூச்சட்டியா மாத்துகின்ற தாயி
அம்மா காத்தருள்வாய் நீயே
நாங்க நெனச்சதெல்லாம் நடக்க வேணும்
அருள் புரிவாயே திருநெல்வேலி........(திருநெல்வேலி)

கண்ணான சத்தியத்த காத்து நிக்கும் அய்யா
கண்ணீர தொடைக்கிறது உங்க கை தான்யா
அய்யா உன் பாதம் பட்டா வெளஞ்சிடுமே பூமி
எல்லார்க்கும் படி அளக்கும் எங்களோட சாமி

கை வீசி நீ நடந்தா வீதி எல்லாம் நடுங்கும்
மகராசன் உன்னக் கண்டு ஊரு சனம் வணங்கும்
எந்நாளும் உங்களுக்கு குலதெய்வம் மாரி தான்
எங்களோட குலதெய்வம் எப்போதுமே நீங்க தான்

முள்ளு வேலி உள்ள ஊரில்
நெல்லு வேலி தந்த சாமி
நல்லதெல்லாம் நடத்தி வெச்சு
ஞாயம் காக்கும் எங்க சாமி
உங்க மனம் போல ஊரு செழிக்கணும்
நாடு செழிக்கணும் அய்யாவே.....(திருநெல்வேலி)

ஏ பாட்டுக்கொரு பாரதிய தந்தது எந்த ஊரு
பாடி வரும் புருணை நதி ஓடி வரும் திருநெல்வேலி
கட்டபொம்மன் வ ஊ சி ய தந்தது எந்த ஊரு
ஊரறியும் திருநெல்வேலி உலகறியும் திருநெல்வேலி

தந்தானத்தா தாளம் போட்டு
தந்தானத்தா தாளம் போட்டு
சந்தோஷமா நீ பாடு சந்தோஷமா நீ பாடு

உன்னோட காலடிய நம்புகிறோம் தாயே
ஓடோடி வந்து எங்க குறை தீர்ப்பாயே
ஆ... உன்னோட சன்னதிக்கு வந்துவிட்டு போனா
கண்ணோட காண்பதெல்லாம் கையில் வந்து சேரும்

மாவிளக்கு ஏத்தி வெச்சு மனசார வேண்டிக்கிட்டு
கோவிலுக்கு முன்னே வந்து கொண்டாடிப் பாடு
நீறெடுத்து நெத்தியிலே நித்தம் நித்தம் பூசிக்கிட்டு
நெஞ்சுருக வேண்டிக்கிட்டு நிம்மதியத் தேடு

எங்கேயும் நெறஞ்சவ நீ
எல்லாமும் தெரிஞ்சவ நீ
சாதி மதம் எனும் பேதம் இல்லாமலே
சத்தியம் மீட்கச் செய்திடம்மா.......(திருநெல்வேலி)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.