நாளை நமதே பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Naalai Namadhe (1975) (நாளை நமதே)
Music
M. S. Viswanathan
Year
1975
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
அன்பு மலர்களே... நம்பி இருங்களே...
நாளை நமதே... இந்த நாளும் நமதே...
தருமம் உலகிலே... 

இருக்கும் வரையிலே... 

நாளை நமதே... இந்த நாளும் நமதே...

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே
காலங்கள் என்னும் சோலகள் மலர்ந்து
காய் கனியாகும் நமக்கென வளர்ந்து
நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே 

நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே

பாசம் என்னும் நூல் வழி வந்த 
வாச மலர்க் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே
வாழ்க்கைப் பூந்தோட்டம்

பாசம் என்னும் நூல் வழி வந்த 
வாச மலர்க் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே
வாழ்க்கைப் பூந்தோட்டம்
மூன்று தமிழும் ஓரிடம் நின்று
பாட வேண்டும் காவியச் சிந்து

மூன்று தமிழும் ஓரிடம் நின்று
பாட வேண்டும் காவியச் சிந்து

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த
வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஒளிமயமாக
வெளிச்சம் தாருங்களே

நாடும் வீடும் உங்களை நம்பி
நீங்கள் தானே அண்ணன் தம்பி
எதையுமே தாக்கிடும் இதயம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே
காலங்கள் என்னும் சோலகள் மலர்ந்து
காய் கனியாகும் நமக்கென வளர்ந்து
நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.