அடியாத்தி யாருக்கு நீ பேத்தி பாடல் வரிகள்

Movie Name
Kanavan (1968) (கணவன்)
Music
M. S. Viswanathan
Year
1968
Singers
T. M. Soundararajan
Lyrics
Alangudi Somu
அடியாத்தி... ஆத்தி... 
அடியாத்தி யாருக்கு நீ பேத்தி 
உன் ஆணவத்தை மாத்தி 
இந்த ஏழைகளை ஏறெடுத்து
பாரம்மா ராஜாத்தி... ஈ...
பாரம்மா ராஜாத்தி 

அடியாத்தி யாருக்கு நீ பேத்தி 
உன் ஆணவத்தை மாத்தி 
இந்த ஏழைகளை ஏறெடுத்து
பாரம்மா ராஜாத்தி... ஈ... பாரம்மா ராஜாத்தி 


அடக்கமின்றி நடப்பது தான் நாகரீகமோ 
பிறரை அடக்கி ஆள நினைப்பதிலே 
உனக்கு மோகமோ
சையா சப்பான் டியோ டிம்மா 
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்பி

சையா சப்பான் டியோ டிம்மா 
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்பி

அடக்கமின்றி நடப்பது தான் நாகரீகமோ 
பிறரை அடக்கி ஆள நினைப்பதிலே 
உனக்கு மோகமோ
படித்திருந்தும் பண்புகளை மறக்கலாகுமோ
பண போதையிலே எளியவரை வெறுக்கலாகுமோ

அடியாத்தி... ஆத்தி... 
அடியாத்தி யாருக்கு நீ பேத்தி 
உன் ஆணவத்தை மாத்தி 
இந்த ஏழைகளை ஏறெடுத்து
பாரம்மா ராஜாத்தி... ஈ... பாரம்மா ராஜாத்தி 


அருமையிலும் அருமையாக பிறவி கிடைக்குது 
அதில் கருணையுள்ள மனிதரைத் தான் 
பெருமை அணைக்குது
ஹோய் சையா சப்பான் டியோ டிம்மா 
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்பி

சையா சப்பான் டியோ டிம்மா 
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்பி

உருட்டுக் கண்ணும் மிரட்டுச் சொல்லும்
தரத்தினைக் குறைக்கும் 
ஒன்றை உருப்படியாய் செய்து வைத்தால் 
சரித்திரம் பிறக்கும்... ஹோய்

அடியாத்தி... ஆத்தி... 


அதிகாரம் செய்தவனோ ஆட்டத்தை முடித்தான் 
இங்கே அன்பு வழி நடந்தவனோ 
நாட்டினைப் பிடித்தான்
அதிகாரம் செய்தவனோ ஆட்டத்தை முடித்தான் 
இங்கே அன்பு வழி நடந்தவனோ 
நாட்டினைப் பிடித்தான் 
இது உழைப்பவரின் பொற்காலம் உலக ஏட்டிலே
உழைப்பவரின் பொற்காலம் உலக ஏட்டிலே 
இனி எத்தர்களின் வருங்காலம் குப்பை மேட்டிலே

அடியாத்தி... ஆத்தி... 
அடியாத்தி யாருக்கு நீ பேத்தி 
உன் ஆணவத்தை மாத்தி 
இந்த ஏழைகளை ஏறெடுத்து
பாரம்மா ராஜாத்தி... ஈ... பாரம்மா ராஜாத்தி 

சையா சப்பான் டியோ டிம்மா 
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்பி

சையா சப்பான் டியோ டிம்மா 
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்பி

சையா சப்பான் டியோ டிம்மா 
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்பி
ஆ... சையா சப்பான் டியோ டிம்மா 
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்பி
ஆ... சையா சப்பான் டியோ டிம்மா 
டங்கிரி பப்பா டிங்கிரி பிம்பி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.