கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Kannan En Kadhalan (1968) (கண்ணன் என் காதலன்)
Music
M. S. Viswanathan
Year
1968
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Alangudi Somu
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
டக்கு முக்கு திக்கு
டக்கு முக்கு திக்கு
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்

அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி


தட்டெழுத்துக்காரி குட்டு வெளி ஆனால்
தட்டெழுத்துக்காரி குட்டு வெளி ஆனால்
கொட்ட கொட்ட முழிப்பாளோ
அம்மாடி திட்டம் இட்டு நடிப்பாளோ
பட்டணத்தை பார்க்கும் பட்டிக்காடு போலே
பட்டணத்தை பார்க்கும் பட்டிக்காடு போலே
தட்டு கெட்டு தவிப்பாளோ
அம்மாடி வெட்டி வெட்டி நடப்பாளோ

அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்

தக்காளி பழமே தள தள உடம்பில்
தக்காளி பழமே தள தள உடம்பில்
எக்காளம் ஏனடியோ ? உனக்கு இக்கோலம் ஏனடியோ ?
முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
முக்காடு ஏனடியோ ?உனது முத்தாரம் நான் அடியோ

அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி

ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
கொடி கட்டி பறக்காதோ
இந்த கோட்டைக்கு அழைக்காதோ
இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து
இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து
கெட்டி மேளம் கொட்டிடாதோ
வாழ்வை புட்டு புட்டு சுவைக்காதோ


கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
ல ல ல ல ல ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.