சிரித்தாள் தங்கப் பதுமை பாடல் வரிகள்

Last Updated: Jan 29, 2023

Movie Name
Kannan En Kadhalan (1968) (கண்ணன் என் காதலன்)
Music
M. S. Viswanathan
Year
1968
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Alangudi Somu
சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை


மார்கழிப் பனி போல் உடையணிந்து -
செம்மாதுளங்கனி போல இதழ் கனிந்து
கார்குழலாலே இடையளந்து - நீ
காத்திருந்தாயோ எனை நினைந்து


அழகெனும் வடிவில் நிலையிழந்தேன் -
இந்தஆண்மகன் பிடியில் எனை மறந்தேன்
பழகியும் ஏனோ தலை குனிந்தேன் -
இன்றுபருவத்தின் முன்னே முகம் சிவந்தேன்
சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை


கயல்விழி இரண்டில் வயல் அமைத்து -
அதில்காதல் என்றொரு விதை விதைத்து
காலமறிந்து கதிர் அறுப்போமா
காவிய உலகில் குடியிருப்போமா


பஞ்சணைக் களத்தில் பூவிரித்து -
அதில்பவள நிலாவை அலங்கரித்து
கொஞ்சிடும் இரவை வளர்ப்போமா -
சுகம்கோடிக் கோடியாய்க் குவிப்போமா
சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.