மின்னல் வரும் சேதியிலே பாடல் வரிகள்

Movie Name
Koduthu Vaithaval (1963) (கொடுத்து வைத்தவள்)
Music
K. V. Mahadevan
Year
1963
Singers
P. Susheela
Lyrics
Alangudi Somu
மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்

மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்


தென்றல் வரும் சேதியிலே கொடி அசையும்,
அசையும்வண்டு தேடி வரும் சேதியிலே பூ மலரும்,
மலரும்கண்களிலே ஆசை நின்று தாளமிடும் -
குமரிகன்னத்திலே நாணம் வந்து கோலமிடும்

மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்


பள்ளியறைச் சேதியிலே பதட்டம் வரும் பதட்டம் வரும்
பருவம் சொல்லும் சேதியிலே மயக்கம் வரும் மயக்கம் வரும்
சொல்லித் தந்த பாடத்தாலே தாய்மை வரும் -
நான்தாலாட்டுப் பாடுகின்ற நாளும் வரும்

மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.