ஒரு கொடியில் இரு பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Kaanchi Thalaivan (1963) (காஞ்சித் தலைவன்)
Music
K. V. Mahadevan
Year
1963
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Alangudi Somu
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா

கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா அண்ணன்
கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா
கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா

வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா
வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா தங்கை
வாழ்வுக்காக என் சுகத்தைக் கொடுக்கின்றேனம்மா

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா

பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன் அந்த
பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்

சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்
சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன் நீ
சிரித்திருக்கும் காட்சியிலே மனதைத் தேற்றுவேன்

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.