வானத்தில் வருவது பாடல் வரிகள்

Movie Name
Kaanchi Thalaivan (1963) (காஞ்சித் தலைவன்)
Music
K. V. Mahadevan
Year
1963
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Alangudi Somu
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு

நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் – அதை
நாடி வந்தால் புது உலகு வரும்
நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் – அதை
நாடி வந்தால் புது உலகு வரும்
நானென்ற தனிமை அடங்கிவிடும் – அங்கு
நாமென்ற இனிமை தொடங்கி விடும்
நானென்ற தனிமை அடங்கிவிடும் – அங்கு
நாமென்ற இனிமை தொடங்கி விடும்

வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு

மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் – அதை
ஏந்திடக் கைகள் தாவி வரும்
மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் – அதை
ஏந்திடக் கைகள் தாவி வரும்
தீங்கனி இதழில் கதை வளரும்
தீங்கனி இதழில் கதை வளரும் – கண்கள்
தேடிய சுகத்தில் அமைதி பெறும் – கண்கள்
தேடிய சுகத்தில் அமைதி பெறும்

வானத்தில் வருவது ஒரு நிலவு இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு

கோடையும் குளிராய் மாறி வரும் – அதில்
கோடி இன்பம் ஊறி வரும்
கோடையும் குளிராய் மாறி வரும் – அதில்
கோடி இன்பம் ஊறி வரும் – மண
மேடையில் திருநாள் மலர்ந்து வரும் – அதில்
மோஹன வாழ்வு கனிந்து வரும்
மேடையில் திருநாள் மலர்ந்து வரும் – அதில்
மோஹன வாழ்வு கனிந்து வரும்

வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.