என்னம்மா சௌக்கியமா எப்படி பாடல் வரிகள்

Movie Name
Koduthu Vaithaval (1963) (கொடுத்து வைத்தவள்)
Music
K. V. Mahadevan
Year
1963
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
என்னம்மா சௌக்கியமாஎப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலேபொழச்சுக் கெடக்குது உசுரு

என்னம்மா சௌக்கியமாஎப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலேபொழச்சுக் கெடக்குது உசுரு


சின்னம்மா ஒடம்பிலே இப்போசிரிக்குது காஞ்சிப் பட்டு -
சிறுதேன் குழல் போலே பூங்குழல் மேலே
தூங்குது மல்லிகை மொட்டு
பெண்மையிலே தேன் எடுத்துவந்தது தங்கத் தட்டு -
உன்கண்களுக்கே விருந்து வைக்கபறந்தது காதல் சிட்டு

என்னம்மா சௌக்கியமாஎப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலேபொழச்சுக் கெடக்குது உசுரு


நாளரு மேனி பொழுதொரு வண்ணம்ஏறுது மெருகு அங்கே - அதைமாலையிலே பார்த்தா மனசினில் வெள்ளம்
ஊறுது உருகுது இங்கே
அறுபது நாழிகை முழுவதும் உன்னிடம்
அடைக்கலம் புகுந்தது நெஞ்சம் -
நீஆளவந்தாய் நான் வாழ வந்தேன் -
இதில்ஆனந்தம் இனியென்ன பஞ்சம்

என்னம்மா சௌக்கியமாஎப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலேபொழச்சுக் கெடக்குது உசுரு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.