Undhan Mugil SuruL Lyrics
உந்தன் முகில் சுருள் பாடல் வரிகள்
Last Updated: Jun 07, 2023
உந்தன் முகில் சுருள் எனுமுன் கூந்தல்
கண் பார்க்க நெஞ்சே ஆடும் மயிலாய் எந்தன் மோஹனா
என் மனம் துள்ளும் கெண்டை மீனே
உன் கண்ணின் கத்திவெட்டும் ஒயிலாய் எந்தன் மோஹினி
தென்றல் பாடி வருகுதே காதல்
தேன் மலர்தனில் வண்டு மொய்க்குதே எந்தன் மோஹனா
அன்பே கண்ணாலிங்கே நீயே பாராய்
டக்குடக்கென்று நெஞ்சம் சொக்குதே எந்தன் மோஹினி
எந்தன் கிராமமே சொர்க்கமாயானதே
நின் பாதம் பட்ட நாடே பொன்னே எந்தன் மோஹனா
பானை தண்ணீரை மொண்டிடும் சாக்கிலே
நீயே வந்தே பேசாய் ஆசைக் கண்ணே எந்தன் மோஹினி
உன்னை சந்திரன் போல் என் கண் பார்க்கும்
நீ சன்னல் பக்கம் காண ஓடிவா எந்தன் மோஹினி
பார்த்தால் சிறுவரெல்லாம் கேலி செய்குவார்
நிலாவை முகில் மூட ஓடுதே எந்தன் மோஹனா
நீயே ஓடாதே நாகம் எனவே நான் ஜோதியாகி
கொண்டே செல்வேன் எந்தன் மோஹினி
எங்கே செல்லினும் மனம் உன் வசந்தான்
கேட்டிடு நீயே உண்மையே சொல்வேன் எந்தன் மோஹனா
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.