Thaainaadu Idhe Veeram Lyrics
தாய் நாடிதே வீரமிகுந்தோர்க்கே பாடல் வரிகள்
Last Updated: Apr 01, 2023
தாய் நாடிதே வீரமிகுந்தோர்க்கே
நவ வாலிபர்க்கே மெய்க்காதலர்க்கே
இந்நாட்டுக்கே ஈடே.........ஏய்.....
இந்நாட்டுக்கே ஈடே வேறிலையே
இந்நாடதே உலகின் பேரொளியே....
இங்கே அஞ்சா நெஞ்சின் பாட்டாளர்
இங்கே பெண்கள் கற்பின் காப்பாளர்
இங்கே கானமே கேளீர்......ஏய்....
இங்கே கானமே கேளீர் மாருதம்போல்
பாட்டாளிகள் சாந்தி மண்ணின்மேல்
பூங்கொம்பில் வசந்த தேன் ஆடல்
ஊஞ்சல் மேல் பெண்மான் பாய்ந்தாடல்
இங்கே சிரிக்கின்றான் சந்திரன்.....ஏய்...
இங்கே சிரிக்கின்றான் சந்திரன்...பால் போலே
செழும் ரோஜா சிரிப்பே கன்னமேலே...
ஒரு பக்கம் நோக்கும் இளையோனே
ஒரு பக்கம் பாயும் கணை தானே
இங்கே நிதம் நிதம் பூஜை......ஏய்.....
இங்கே நிதம் நிதம் பூஜை திருநாளே
சப்த மேளமும் தாளமும் கடல்போலே
நல்நண்பர்க்கு ஆவியே தருவோம் நாம்
பகைவன் நாடில் கொலை வாளே நாம்
போர்க்களம் புகுந்தால் நாம்...
போர்க்களம் புகுந்தால் நாம் பின் போகோம்
வெகு கடினமே வெல்லல் நாம் சாகோம்...
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.