Vaaraai Neeye Lyrics
வாராய் நீயே பாடல் வரிகள்
Last Updated: Apr 01, 2023
வாராய்.......நீயே வா....போற்றி வா......
சத்தியமாகும் வழியே
பகவானின் கோயில் ஜோதியே
இருளே இல்லையே.......(வாராய்)
எவ்விஷயத்தில் நீ தீர்ப்பு கூற இயலாதோ அதையே
பகவான் தனது தீர்ப்பில் நீயே நம்பி விடுவாயே....
உன்னை வாட்டும் துன்பம் யாவும் அவர் போக்கிடுவாரே
உன்னால் முடியா காரியம் பகவான் செய்வாரே
பகவானே செய்வாரே..........(வாராயே)
சொல்லவே நீ யாதும் அவஸ்யமில்லை வந்தால் போதுமே
இந்த சன்னதி முன் உந்தன் தலை பணிந்தால் போதுமே
உன் மனதில் உள்ள எண்ணமெல்லாம் அவரே உணருவார்
உலகோரின் செய்கை ஒவ்வொன்றையும் கண்ணால் உணருவார்
கண்ணாலே உணருவார்........(வாராயே)
நீ கேட்காமலே இங்கே நெஞ்சின் ஆசை கைகூடும்
மனத் தூய்மை உள்ளோர் வந்தே இங்கே சேவிக்கக்கூடும்
எல்லோர்க்கும் பொது ஞாயம் சொல்லும் சபையும் இதுவே
இவ்வுலகிலே எல்லோரில் பெரும் நீதிமான் இவரே..
பெரும் நீதிமான் இவரே.......(வாராயே)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.