Vaazhga Vaazhga Lyrics
வாழ்க பாட்டாளியே பாடல் வரிகள்
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளி
தாழ்வில்லாத வழியே இங்கே
அமைந்திட வாரும் கூட்டாளி..(வாழ்க)
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
நமது பாட்டாளி தோழரின் ஒற்றுமை
மனதால் ஜெகம் வெல்வாரே
ஆழ்கடலே வழி உண்டாக்க
பெரும் மலையே தலைதனை தாழ்த்த
வைரந்தானே நெஞ்சே நமக்கே
இரும்பே கைகள் பாராய்
நாம் நினைத்தாலோ மலையைத் துளைத்தே
காண்போம் இங்கே பாதை......(வாழ்க)
விதியது உழைப்பை கொண்டனை நீதான்
உழைத்திடவே அஞ்சுவதா
நேற்று நீ அந்நியனை மதித்தனையே
இன்று உனையே மதித்திடு தோழா....
நமது துக்கமே ஒன்றே தோழா
நமக்கே சுகமே ஒன்றே
நமதின் மனமே நன்றே புவியில்
நமதின் வழியே நேர்மை......(வாழ்க)
நீர் துளியோடு நீர்த்துளி கலந்தால்
பெருகியே ஓடும் ஆறாய்
ஓர் மணலோடு மணலே சேர்ந்தால்
பாலைவனம் தங்கந்தானே........
கல்லொடு கல்லே சேர்ந்தால் இங்கே
மலையே ஆகும் பாங்கனே.....
அன்பொடு அன்பே கலந்தால் இங்கே
மனிதன் தலைவிதி வெல்லுவான்...(வாழ்க)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.