முந்தானை பந்தாட அம்மானை பாடல் வரிகள்

Movie Name
Nenjam Marappathillai (1963) (நெஞ்சம் மறப்பதில்லை)
Music
Viswanathan Ramamoorthy
Year
1963
Singers
L. R. Eswari, P. Susheela
Lyrics
Kannadasan

முந்தானை பந்தாட அம்மானை பாடுங்கடி
முத்தோடு கொண்டாடி கொத்தோடு ஆடுங்கடி (முந்தானை)

கை வளையல் கொஞ்சும் இரு கண்கள் கெஞ்சும்
சிறு நடையில் அஞ்சும் பள்ளி அறையில் மிஞ்சும்
குங்குமப்பூ தங்கநிற மங்கையரே வாருங்கடி
கோடையிலே மேகமென வந்தவரை வாழ்த்துங்கடி (முந்தானை)

கண்ணழகும் பொன்னழகும் காலழகும் ஆடிவர
முன்னழகும் பின்னழகும் தன்னாலே ஓடிவர
தங்க வண்ணத் தேரோட்டம் தளதள வெள்ளோட்டம்
கண்களுக்கு விருந்தாக கைவீசி வாருங்கடி (முந்தானை)

கொண்டவரும் கண்டவரும் மன்னவரும் பாராட்ட
கூந்தலினைக் காற்று வந்து மெல்ல மெல்ல தாலாட்ட
சின்ன முகம் பாலாக மின்னல் தந்த நூலாக
அன்னமெனத் தள்ளாடி பின்னிப் பின்னி ஆடுங்கடி (முந்தானை)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.