குறிஞ்சியிலே பூ மலர்ந்து பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Kandan Karunai (1967) (கந்தன் கருணை)
Music
K. V. Mahadevan
Year
1967
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே
குறு குறுத்த வண்டு ரெண்டு
பறக்குதடி முன்னாலே
குறு குறுத்த வண்டு ரெண்டு
பறக்குதடி முன்னாலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே

தந்தான தனா தன தந்தினா
தந்தான தனா தன தந்தினா


வெள்ளி மலை மான்களெல்லாம் 
துள்ளுதடி வலையிலே
விளங்கி வந்த சங்கு நாதம் 
முழங்குதடி மலையிலே
வெள்ளி மலை மான்களெல்லாம் 
துள்ளுதடி வலையிலே
விளங்கி வந்த சங்கு நாதம் 
முழங்குதடி மலையிலே
பால் மணக்குது பழம் மணக்குது
பறவை கூடும் வனத்திலே
தேன் இருக்குது தினை இருக்குது
வேடுவர் தினை புனத்திலே
பால் மணக்குது பழம் மணக்குது
பறவை கூடும் வனத்திலே
தேன் இருக்குது தினை இருக்குது
வேடுவர் தினை புனத்திலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே

தந்தான தனா தன தந்தினா
தந்தான தனா தன தந்தினா


மயிலிருக்குது குயிலிருக்குது 
வள்ளி மலை நிலத்திலே
வேல் இருக்குது வில் இருக்குது 
வஞ்சியரின் முகத்திலே
மயிலிருக்குது குயிலிருக்குது 
வள்ளி மலை நிலத்திலே
வேல் இருக்குது வில் இருக்குது 
வஞ்சியரின் முகத்திலே
முத்து மாலை பவள மாலை 
மின்னுதடி கழுத்திலே
மூன்று காலம் உணர்ந்து சொல்லும் 
திறமிருக்கு மனத்திலே
முத்து மாலை பவள மாலை 
மின்னுதடி கழுத்திலே
மூன்று காலம் உணர்ந்து சொல்லும் 
திறமிருக்கு மனத்திலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே
குறு குறுத்த வண்டு ரெண்டு
பறக்குதடி முன்னாலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.