திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடல் வரிகள்

Movie Name
Kandan Karunai (1967) (கந்தன் கருணை)
Music
K. V. Mahadevan
Year
1967
Singers
P. Susheela
Lyrics
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் ( இசை )

திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்
திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
இசை சரணம் - 2
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
இருவர் திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.