சொல்லச் சொல்ல இனிக்குதடா பாடல் வரிகள்

Last Updated: Feb 07, 2023

Movie Name
Kandan Karunai (1967) (கந்தன் கருணை)
Music
K. V. Mahadevan
Year
1967
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருளுரைத்து
தகப்பன் சுவாமி என பெயர் பெற்ற முருகா...
மண்ணுக்கும் விண்ணுக்கும் சுவாமி என வந்த
என் சுவாமிக்கும் நாதனே சுவாமி நாதா...


சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா 

பிள்ளை பிராயத்திலே 
பெரிய பெயர் பெற்றவனே
பிள்ளை பிராயத்திலே 
பெரிய பெயர் பெற்றவனே
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா


முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரனென்று
மன மொழி கூறும்
முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரனென்று
மன மொழி கூறும்
உயிரினங்கள் ஒன்றை ஒன்று 
வாழ்த்திடும் போது
உயிரினங்கள் ஒன்றை ஒன்று 
வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது
உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ
முருகா...

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...


உலகில் ஆடும் தொட்டில் எல்லாம்
உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகள் எல்லாம் 
உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறி 
சந்திக்கும் போது 
யுகங்கள் எல்லாம் மாறி மாறி 
சந்திக்கும் போது 
உன் முகமலரின் அழகு மட்டும் 
முதுமை வராது 
கந்தா முதுமை வராது 
குமரா...

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.