தெய்வம் தந்த வீடு பாடல் வரிகள்

Movie Name
Aval Oru Thodar Kathai (1974) (அவள் ஒரு தொடர் கதை)
Music
M. S. Viswanathan
Year
1974
Singers
K. J. Yesudas
Lyrics
Kannadasan
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
(இசை)
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
(இசை)

நான் கேட்டு தாய்தந்தை படைத்தாரா ஆ ஆ Alap
நான் கேட்டு தாய்தந்தை படைத்தாரா
இல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
(இசை) 

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? 
(இசை) 

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? 

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.