Song lyrics

Madi Meethu Lyrics

மடி மீது தலை வைத்து பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
K. V. Mahadevan
Year
1963
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyricist
Kannadasan
Madi Meethu

Lyrics

Madi Meethu Lyrics

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்... ஓ... ஓ...
மறு நாள் எழுந்து பார்ப்போம்... ஓ... ஓ...

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுதும் புலரும் அணைப்பிலே

ஆஹா

ஓஹோ

ம் ஹும்...

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

இருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம் 

இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே
சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே

சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

இருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம் 

வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே 
வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே 

காயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே
ஆஹா

ஓஹோ

ம் ஹும்...

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

இருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people