நடையா இது நடையா பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Annai Illam (1963) (அன்னை இல்லம்)
Music
K. V. Mahadevan
Year
1963
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
முன்னாலே வரச் சொல்லி அழைக்குது
முகத்திலே கடுகு வெடிக்குது

வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா
தையா தக்கா தையா தக்கா உய்யா

நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

கண்ணுனு இருந்தா இமை வேணும்
கழுத்துனு இருந்தா நகை வேணும்
கண்ணுனு இருந்தா இமை வேணும்
கழுத்துனு இருந்தா நகை வேணும்
பொண்ணுன்னு இருந்தா துணை வேணும்
ஒண்ணும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா

நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
காரோட்டும் எனக்கொரு கீதா
கல்யாணம் பண்ணிக் கொள்ள தோதா

நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா
தையா தக்கா தையா தக்கா உய்யா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.