பாலூட்டி உழவு செய்வார் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Bhaaga Pirivinai (1959) (பாகப்பிரிவினை)
Music
Viswanathan Ramamoorthy
Year
1959
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
பாலூட்டி உழவு செய்வார்...
உழவு செய்வார் 

ஆ... ஆ... ஆ... ஆ... 

பனி போல் விதை நடுவார்...
விதை நடுவார்... ஓ... 

ஆ... ஆ... ஆ... ஆ... 

மாம்பழத்து சாரெடுத்து
வயலுக்கு உரமிடுவார்...

உரமிடுவார்...

தேன் பாய நெல் விளையும்
தென் பாண்டி நாட்டினிலே... ஏ...
ஆ... ஆ... ஆ... 

தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்

தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்த கூத்தாட்டம் ஒயிலாட்டம்

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்த கூத்தாட்டம் ஒயிலாட்டம்

ஓ... ஓ... ஓ... ஹோய்...

ஓ... ஓ... ஓ... ஹோய்...

தண்டை சிலம்புகள் தைய தந்தோமென
தங்க வளையல்கள் ஐயோ வந்தோமென

தங்க வளையல்கள் ஐயோ வந்தோமென

கொண்டையிலே மலர் செண்டு குலுங்கிட
வண்டு விழியெனும் செண்டைகள் துள்ளிட
தேரோடும் எங்க 

ஓஹோய் சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்

ஓ... ஓ... ஓ... ஹோய்...

ஓ... ஓ... ஓ... ஹோய்...

சின்னஞ் சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட

சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட

அன்னம் பிறப்பதன் முன்னம் பிறந்தவர்
ஆடுவதை கண்டு மா மழை பெய்திட
நீரோடும் வைகை 

ஆத்தோர மேடையிலே
ஆனந்த கூத்தாட்டம் ஒயிலாட்டம் 

சித்திரை மாதம் முத்துகள் வித்து
திரும்பி இங்கே வருவதென்றே
சென்றவர் இன்னமும் வந்திலர் 
சேதி தெரிந்து சொல்லடி 

ராமாயம்மா

ராமாயம்மா ராமாயம்மா ஆ... ஆ...

ஓ ராமாயம்மா...

மிச்ச இடுப்பில் மந்திரி பொண்ணும்
விரித்த வலையில் விழுந்து விட்டார்
உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
உண்மையை சொல்லடி ராமாயம்மா

ராமாயம்மா ராமாயம்மா... ஆ... ஆ...

ஓ ராமாயம்மா...

சின்னஞ் சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட

சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட

அன்னம் பிறப்பதன் முன்னம் பிறந்தவர்
ஆடுவதை கண்டு மா மழை பெய்திட
நீரோடும் வைகை 

ஆத்தோர மேடையிலே
ஆனந்த கூத்தாட்டம் ஒயிலாட்டம்

மஞ்சுவிரட்டில் மாடு பிடித்தால் 
மாலை சூடி மணப்பதென்று
சொன்னவள் இன்னமும் வந்திலள் 
நீயும் தூது சொல்லடி

ராமாயம்மா

ராமாயம்மா ராமாயம்மா ஆ... ஆ...

ஓ ராமாயம்மா...

கொஞ்சு கிளி போல் வஞ்சிக்கும் முன்னர்
கொள்ளை ஆசை பிறந்திருக்கு
வாசக் கதவு சாத்தியிருக்கு 
வழியுமில்லை ராமாயம்மா

ராமாயம்மா ராமாயம்மா... ஆ... ஆ...

ஓ ராமாயம்மா...

தண்டை சிலம்புகள் தைய தந்தோமென
தங்க வளையல்கள் ஐயோ வந்தோமென

தங்க வளையல்கள் ஐயோ வந்தோமென

கொண்டையிலே மலர் செண்டு குலுங்கிட
வண்டு விழியெனும் செண்டைகள் துள்ளிட
தேரோடும் எங்க 

ஓஹோய் சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்த கூத்தாட்டம் ஒயிலாட்டம் 

ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு 

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்... 

ஆ ஹா...

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்... 

ஓ ஹோ...

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்... 

ஆ ஹா...

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்... 

ஓ ஹோ...

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்... 

ஆ ஹா...

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்... 

ஓ ஹோ...

ஓ... ஓ... ஓ... 

ஓ... ஓ... ஓ... 

ஓ... ஓ... ஓ... 

ஓ... ஓ... ஓ... 

ஓ... ஓ... ஓ... 

அனைவர் தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.