மாம்பழத்து வண்டு பாடல் வரிகள்

Movie Name
Sumaithaangi (1962) (சுமைதாங்கி)
Music
Viswanathan Ramamoorthy
Year
1962
Singers
Lyrics
Kannadasan
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
கோடி விழி பட்டு கோலவிழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
கோடி விழி பட்டு கோலவிழி சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று

கோடை மழை மேகம் கோபுரத்து தீபம்
கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்
கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்
என்னுரிமை என்றே நான் இருக்கும் போது
என்னுரிமை என்றே நான் இருக்கும் போது
தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு  வாடியது இன்று

கன்னியர்க்கு தென்றல் அன்னை முறை அன்றோ
அன்னை அவள் மெல்ல ஆடை தொடுவாளா
சொன்னபடி கேட்பேன் என்ன செய்ய வேண்டும்
கண்ணி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்
கண்ணி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.