நிலவும் மலரும் பாடல் வரிகள்

Movie Name
Then Nilavu (1961) (தேன் நிலவு)
Music
A. M. Rajah
Year
1961
Singers
A. M. Rajah, P. Susheela
Lyrics
Kannadasan
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
மணம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா
மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
இன்று பார்த்து பார்த்து முடித்துவிட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
மலர்முடிப்போம் மணம் பெறுவோம் மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.