இளவேனில் சந்திரிகையாய் பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Thanthai (1953) (தந்தை)
Music
P. S. Divakar
Year
1953
Singers
A. M. Rajah, P. Leela
Lyrics
Kannadasan

இளவேனில் சந்திரிகையாய்
இன்றும் என்றும் எந்தன் முன்னில்
ஒளியாது ஒளி வீசும் கண்மணி

அமுதான சந்திரனே
இன்றும் என்றும் என்னை நீங்கி
அகலாதே வாழ்ந்திடும் என் அன்பிகல
நடிகை நானே...

நன்று உணர்வேன் கண்ணே
பாரோர் பழி பேசி நகையாடும் பெண் நான்
பழிச் சொல்லை மதியாது நாடுவோம் வாழ்வே
பாரென் கண்ணீரில் இன்பம் கொண்டாடுவார்

இந்த பயமேனோ இன்ப பாக்ய ராணியே
இனிமாறோம் ஏழுலகம் எதிராகிலும் நீ
எனை நீங்கில் துயர் தானும் தாளேன் நான்
அபலை நானே ஆனாலும் நல் மனம்
கொண்டேன் அதில் மேவும் மன்னன் நீ (இளவேனில்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.