பூமாலையில் ஓர் பாடல் வரிகள்

Movie Name
Ooty Varai Uravu (1967) (ஊட்டி வரை உறவு)
Music
M. S. Viswanathan
Year
1967
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது

சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
ஆ..
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
ஆ…
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது

மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்
ஆ…
மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்
ஆ…
இளமை அழகின் இயற்கை வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
இன்னும் வேண்டுமா என்றது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.