Paarthal Pasi Theerum Lyrics
யாருக்கு மாப்பிள்ளை பாடல் வரிகள்
Last Updated: Jun 01, 2023
Movie Name
Paarthal Pasi Theerum (1962) (பார்த்தல் பசி தீரும்)
Music
Viswanathan Ramamoorthy
Year
1962
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ..ஓ ..ஓ.
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
(யாருக்கு…)
கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கைகலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
(எந்த பார்வை பட்டு......யாருக்கு…)
ஊர் அறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
(எந்த பார்வை பட்டு.....யாருக்கு…)
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ..ஓ ..ஓ.
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
(யாருக்கு…)
கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கைகலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
(எந்த பார்வை பட்டு......யாருக்கு…)
ஊர் அறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
(எந்த பார்வை பட்டு.....யாருக்கு…)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.