அன்று ஊமைப் பெண்ணல்லோ பாடல் வரிகள்

Movie Name
Paarthal Pasi Theerum (1962) (பார்த்தல் பசி தீரும்)
Music
Viswanathan Ramamoorthy
Year
1962
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
ஆனா ஆனா ஆவன்னா ஆவன்னா இன இன ஈயன்ன
உன உன ஊவன்னா என என ஏயன்னா ஏயன்னா
ஓனா ஓனா ஓவன்னா ஓவன்னா ஔவன்னா ஔவன்னா அஃகன்னா அஃகன்னா

கசடதபற கசடதபற வல்லினமாம் வல்லினமாம்
ஙஞண்நமன ஙஞண்நமன மெல்லினமாம் மெல்லினமாம்
யரலவழள யரலவழள இடையினமாம் இடையினமாம்

ஓஹோஹோ …

அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ

மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ

ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ

ஓஹோஓஹோ …

வண்ணத்தமிழ்ச் சேலை கட்டிக் கொண்டல்லோ
கட்டிக்கொண்ட ஆடை ஒட்டிக் கொண்டல்லோ
கொஞ்சும் தமிழ் வார்த்தை நெஞ்சில் வந்தல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்றல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ

மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ ஹோஹோ

காட்டில் வந்த வேடன் மானைக் கண்டல்லோ ஓ
மானைக் கண்ட வேளை மயக்கம் கொண்டல்லோ ஓ
இங்கே வந்த காதல் அங்கே வந்தல்லோ
அங்கும் இங்கும் காதல் தூது சென்றல்லோ
தூது சென்ற காத்ல் பாடிவந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
தூது சென்ற காத்ல் பாடிவந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ

மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடும் பாட்டல்லோ
ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ

ஓஹோஹோ …

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.