அத்தைக்கும் மீச பாடல் வரிகள்

Movie Name
Enga Oor Raja (1968) (எங்க ஊர் ராஜா)
Music
M. S. Viswanathan
Year
1968
Singers
L. R. Eswari
Lyrics
Kannadasan
அத்தைக்கும் மீச வச்சு பாருங்கடி
முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி
ஆடை போன வழி ஆசை போகுமென்று
ஆடாமல் ஆடுங்கடி

பம்பின பம்பின பம்பின பம்பின பம்

சச சசச சசச 

பம்பின பம்பின பம்பின பம்பின பம்

சச சசச சசச 

நடக்கும் நடையென்ன மாம்மா 

மாமா

சிரிக்கும் சிரிப்பென்ன ரா ரா 

ராஜா

ரசிக்கும் சுகமென்ன ஆஹா

ஆஹா

கொடுக்க தடையில்லை வா வா 

வா வா 

கன்னத்தில் கன்னிப் படம் போட்டாள்
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் தடை போடு

கன்னத்தில் கன்னிப் படம் போட்டாள்
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் தடை போடு

அத்தைக்கும் மீச வச்சு பாருங்கடி
முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி
ஆடை போன வழி ஆசை போகுமென்று
ஆடாமல் ஆடுங்கடி

உலகை படைப்பது பெண்கள் 

பெண்கள்

உயிரை இழுப்பது கண்கள் 

கண்கள்

மயக்கம் கொடுப்பது நாங்கள் 

நாங்கள்

மயங்கி விழுவது ஆண்கள் 

ஆண்கள்
எண்ணத்தில் என்றால் இனிக்காதோ
இன்பத்தில் நெஞ்சம் தான் துடிக்காதோ

அத்தைக்கும் மீச வச்சு பாருங்கடி
முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி

பறக்கும் பறவைகள் முன்னே 

முன்னே

வலையை விரித்தது என்னே 

என்னே

நிலத்தை அளந்தது போதும் 

போதும்

மனதை அளந்திட வாரும் 

வாரும்

சிட்டுக்கள் கூட்டத்தில் விளையாடு
இல்லையேல் கைகளில் வளை போடு

சிட்டுக்கள் கூட்டத்தில் விளையாடு
இல்லையேல் கைகளில் வளை போடு

அத்தைக்கும் மீச வச்சு பாருங்கடி
முத்தத்தில் மாலை கட்டி போடுங்கடி
ஆடை போன வழி ஆசை போகுமென்று
ஆடாமல் ஆடுங்கடி

பம்பின பம்பின பம்பின பம்பின பம்...

சச சசச சசச 

பம்பின பம்பின பம்பின பம்பின பம்...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.