ஏழு கடல் சீமை பாடல் வரிகள்

Last Updated: Jan 29, 2023

Movie Name
Enga Oor Raja (1968) (எங்க ஊர் ராஜா)
Music
M. S. Viswanathan
Year
1968
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை
ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

மாம்பழக் கொத்துக்கும் மல்லிகை மொட்டுக்கும் 
பொண்ணுன்னு பேரு வெச்சான்
மையிட்ட கண்ணுக்குள் மந்திரம் போட்டவன்
சங்கதி சொல்லி வெச்சான்

ஓஹோ சங்கதி சொல்லி வெச்சான்
ஆஹா சங்கதி சொல்லி வெச்சான்

செவ்வந்தி பூவிலே சிட்டுச் சிரிப்பிலே
சித்திரம் போட்டு வெச்சான்

எங்கள் தேவர் திருமகன் வாழ்க சுகமென
மக்களை வாழ வெச்சான்

ஓஹோ மக்களை வாழ வெச்சான்
ஆஹா மக்களை வாழ வெச்சான்

ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

கோட்டை இருக்குது கொடி பறக்குது
தேவரின் சீமையிலே 
சின்னக் கொடி இருக்குது குலுங்கி நிக்குது 
தேவியின் மேனியிலே 

வேட்டை நடக்குது விழி பறக்குது
ஆட்டம் நடக்கையிலே
ஆஹா ஆட்டம் நடக்கையிலே
ரெண்டு வெள்ளி சிலம்புகள் துள்ளி குதிக்குது 
பொறந்த நாளையிலே

ஓஹோ பொறந்த நாளையிலே
ஆஹா பொறந்த நாளையிலே

ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

மரிக்கொழுந்துக்கு வாசம் கொடுத்தவள்
மறத்தி பெண்ணடியோ
அவள் வாரி முடித்த பின் கட்டி அணைச்சா
வாசம் வருமடியோ

ஓஹோ வாசம் வருமடியோ
ஆஹா வாசம் வருமடியோ

மாலை முடிக்கிற காலம் பொறந்த பின்
வாசலை பாருமையோ
மாலை முடிக்கிற காலம் பொறந்த பின்
வாசலை பாருமையோ
இப்போ வாழ்த்து படிக்கிற நேரம் பிறந்தது 
வாழ்ந்திட வாருமையோ

ஓஹோ வாழ்ந்திட வாருமையோ
ஆஹா வாழ்ந்திட வாருமையோ

ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா
இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.