வாவென்று அழைக்குதே பாடல் வரிகள்

Movie Name
Odi Vilaiyaadu Paapa (1959) (ஓடி விளையாடு பாப்பா)
Music
V. Krishnamoorthy
Year
1959
Singers
P. Susheela, Seerkazhi Govindarajan
Lyrics
Kannadasan

வாவென்று அழைக்குதே தென்னை ம்ம்..ம்ம்..
வானம் உயர்ந்தோங்கி பாளை
சிரிப்போடு உன்னை
வாவென்று அழைக்குதே தென்னை..(வாவென்று)

பூச்சூடி குழல் வாரி காணவே பூரிப்பு
பொன்னோலையால் தருதே
புதுமையாம் பூப்பென்றே...(வாவென்று)

அடிக்காத திருத்தாத அழகோவியம் – நான்
அடிக்காத திருத்தாத அழகோவியம் – வண்ண
அலை மோதும் வசந்த மலர்தன்னில் காவியம்
அடிக்காத திருத்தாத அழகோவியம்....

வடித்த தமிழ் தன்னால் வார்க்கவில்லை உங்கள்
வாழ்விற்கே வழிக்காட்டும் உயிரின் கலை
அடிக்காத திருத்தாத அழகோவியம் ம்ம்...ஹூம்ம்
இதழ் துடிப்பாலே......
இதழ் துடிப்பாலே துயர் நீக்கி
சுகம் நல்கும் காவியம்...... (அடிக்காத)

தாய் போலே உணவூட்டும்
தங்கச் செந்நெல் வயலிதே
பாயும் காற்றில் கதிர்கள் ஆடி
பரவசம் தருகுதே

தங்கம் போன்ற கதிருக்குள்ளே
தரளம்.....??? போன்ற அரிசிதான்
அங்கம் தேய ஏரில் உழுதோர்
அழுத கண்ணீர் துளிகள்தான்

வரப்பும் நீயே வயலும் நீயே
வரப்பும் நீயே வயலும் நீயே...(அடிக்காத)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.